முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலை கலெக்டர் அலுவலகத்தில் பிறப்பு இறப்பு பதிவு குறித்த ஆய்வு கூட்டம்:டிஆர்ஒ தலைமையில் நடைபெற்றது

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் பிறப்பு, இறப்பு பதிவு சம்மந்தமான மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்டவருவாய் அலுவலர் சா.பழனி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுகாதாரபணிகள் துணை இயக்குநர் மரு.ஆர்.மீரா,, முன்னிலைவகித்தார். மேலும் இக்கூட்டத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) குணசேகரன், அனைத்து தலைமையிடத்து வட்டாட்சியர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் செயல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள், அரசு மருத்துவ கல்லூரி மருந்துவமனை, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிகழும் பிறப்புகளுக்கு இலவச பிறப்பு சான்றுகள் உடனே வழங்கப்படும் என தெரிவித்தார். மேற்கண்ட வசதியினை பிரசவித்த தாய்மார்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். மேலும் குழந்தையின் பெயரை ஓர் ஆண்டிற்குள் சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் கட்டயமாக பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார். தனியார் மருத்துவ மனைகள் பிறப்பு நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்தார். அரசு மருத்துவ கல்லூரி மருந்துவ மனை, அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிரசவித்த தாய்மார்களுக்கு உரிய நேரத்தில் இலவச பிறப்பு சான்றிதழ் மற்றும் மேற்படி மருத்துவ மனைகளில் நிகழும் அனைத்து இறப்புகளுக்கு இலவச இறப்பு சான்றிதழ் கிடைக்கவில்லை யெனில் கீழ்கண்டதொலைபேசி எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம் எனதெரிவித்தார்.கூடுதல் மாவட்ட பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகம், திருவண்ணாமலை - 04175-232474மாவட்டகலெக்டர் அலுவலகம் (இலவசதொலைபேசிஎண்) - 1077 மேலும் பொதுமக்கள் பிறப்பு, இறப்பினைஓர் ஆண்டிற்குள் பதிவு செய்யவில்லையெனில், நீதிமன்றத்திற்கு செல்லாமல் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்று சம்மந்தப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவாளரிடம் பதிவு செய்யலாம் என தெரிவித்தார். மேலும் பொது இடங்களில் நிகழும் விபத்துகளில் இறக்கும் நபர்களை உடன் பதிவாளர் விசாரித்து பதிவினை மேற்கொள்ளவேண்டும் என உத்தரவிட்டார்.முடிவில் இணைமாவட்டபிறப்பு, இறப்புபதிவாளரும் உதவி இயக்குநருமான சுரேஷ்குமார் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்