முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 114 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 8ஆயிரம் நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் கலெக்டர் அலுவலகத்திலுள்ள காயிதே மில்லத் அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டாஇ புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல் வேலைவாய்ப்பு கடனுதவிநிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டா மாற்றுதிறனாளிகளுக்கு உதவி முதியோர் உதவித் தொகைகாவல்துறை பாதுகாப்புஇ மின் இணைப்பு மற்றும் பொதுநல மனுக்கள் என 405 மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில் பட்டுவளர்ச்சி துறையின் கீழ் 2016-17 மாநில திட்டத்தின்கீழ் 14 விவசாயிகளுக்கு ரூ.9 இலட்சத்து 41 ஆயிரத்து 125 மானிய உதவி தொகையினையும், மாவட்ட விளையாட்டு துறையின் மூலம் 2014-15 ஆம் ஆண்டிற்கான கல்லூரிகளில் இணை விளையாட்டு மேம்பாட்டு திட்டத்தில் கல்லூரி போட்டிகளில் வெற்றி பெற்ற 99 வீரர் வீராங்கணைகளுக்கு ஊக்க தொகையாக ரூ.1 .இலட்சத்து 67 ஆயிரத்தினையும், மாவட்ட சமூக பாதுகாப்பு துறையின் மூலம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ 50 ஆயிரம் விதம் ரூ 1 இலட்சத்திற்கான காசோலையினையும் ஆக மொத்தம் 114 பயனாளிகளுக்கு ரூ.12 இலட்சத்து 8ஆயிரத்து 125 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.அ.ராமன், வழங்கினார்.மேலும் ஹரியான மாநிலத்தில் நடைப்பெற்ற தேசிய அளவிலான மாற்று திறனாளிகளுக்கான 5வது ஐ_டோ விளையாட்டு போட்டிகளில் 55 கிலோ எடை பிரிவில் வேலூர் மாவட்டத்தை சார்ந்த மாணவன் செல்வா அவர்கள் கலந்துக்கொண்டு வெண்கலம் பதக்கத்தை பெற்றார் இந்த மாணவன் மாவட்ட ஆட்சியரிடம் பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.மணிவண்ணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பரமேஸ்வரி,; சமூக பாதுகாப்புத் துறை அலுவலர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் வேணுசேகரன், உதவி இயக்குநர் பட்டு வளர்ச்சித்துறை பாலசுப்பிரமணி, ஆய்வாளர்கள் கணபதிராஐ_, விஐயகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்