முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை தைக்வாண்டோ அகாடமியின் மாணவர்கள் கின்னஸ் சாதனை கலெக்டர் வாழ்த்து

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.- மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  கொ.வீர ராகவ ராவ்,  தலைமையில்  நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வருகை புரிந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மனுக்களை அளித்தனர்.
  இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 42 மனுக்களும், குடும்ப அட்டை தொடர்பான 11 மனுக்களும், வேலைவாய்ப்பு கோரி 5 மனுக்களும், முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை கோரி 77 மனுக்களும், அடிப்படை வசதிகள் கோரி 55 மனுக்களும், புகார் தொடர்பான மனுக்கள் 8, கல்வி உதவித்தொகை வங்கிக்கடன் மற்றும் இதர கடன் வசதிகள் கோரிய 2 மனுக்களும், திருமண உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், சலவைப் பெட்டி தொடர்பான 3 மனுக்களும்;, ஓய்வூதியம் நிலுவைத்தொகை மற்றும் ஓய்வூதிய பலன்கள் தொடர்பாகவும், தொழிலாளர் நல வாரியம் தொடர்பாகவும் 4 மனுக்களும் மற்றும் இதர 41 மனுக்களும் என மொத்தம் 248 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
 இக்கூட்டத்தில், சமூக பாதுகாப்புத்துறையின் சார்பில், திருப்பரங்குன்றம் வட்டத்தைச் சேர்ந்த 1 நபருக்கு முதியோர் உதவித்தொகை, மதுரை வடக்கு வட்டத்தைச் சேர்ந்த 3 நபர்களுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் 1 நபருக்கு விதவை உதவித்தொகையினையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 6 நபர்களுக்கு தலா ரூ.3,480 மதிப்பில் என மொத்தம் ரூ.20,880 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரத்தினையும், 12 நபர்களுக்கு தலா ரூ.3,950 மதிப்பில் என மொத்தம் ரூ.47,400 மதிப்பில் விலையில்லா தேய்ப்பு பெட்டிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். 
 மேலும், மதுரை தைக்வாண்டோ அகாடமியின் மாணவர்கள் கின்னஸ் சாதனை புரிந்தமைக்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அம்மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

       இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கூ.வேலுச்சாமி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சி.இந்திரவள்ளி, சமூகப் பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சாந்தா உட்பட அனைத்துத்துறை அலு

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்