முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசினர் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் தமிழர்களின் இயற்கை பராம்பரிய உணவு திருவிழா

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

 

உத்திரமேரூர் ஒன்றியம் களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நேற்று தமிழர்களின் இயற்க்கை பராம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது. பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அதிக தீமைகளை ஏற்படுத்தும் துரித உணவுகளை தவிர்த்து பராம்பரிய இயற்கை உணவு முறைக்கு திரும்ப கொண்டு வரும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இராண்டாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு தமிழர்களின் இயற்கை மருத்துவ குணமுடைய பராம்பரிய உணவுகளை சமைத்து கண்காட்சியில் வைத்தனர்.

 

மேலும் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள உணவுகளை உண்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்தும் பார்வையாளர்களுக்கு விளக்கமளித்தனர். சரிவிகித உணவு பற்றியும், பராம்பரிய இயற்க்கை ஊட்டச்சத்து உணவு முறைகளையும் தெரிந்து கொள்ள இந்த உணவுத் திருவிழா அமைந்ததாக மாணபியர்கள் தெரிவித்தனர். சிறந்த சமையல் செய்து விளக்கமளித்த மாணவ-மாணவியர்களுக்கு நிறுவன முதல்வர் சிவகுமார் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் மாணவ-மாணவியர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்