முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவொற்றியூர் மீனவர் கிராமத்தில் 65 குடிசை வீPடுகள் தீயில் கருகியது முன்னாள் எம்.எல்.ஏ., கே.குப்பன் நிவாரண வழங்கினார்

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      சென்னை
Image Unavailable

 

திருவொற்றியூர் காசிவிஸ்வநாதர் கோயில் குப்பத்தில் நேற்று தீடீர் என ஏற்பட்ட தீ விபத்தில் 65 குடிசை வீடுகள் தீயில் கருகியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முன்னாள் எம்.எல்.ஏ., குப்பன் நிவாரண உதவிகள் வழங்கினார்.

 

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் மூன்றாவது வட்டத்தில் அடங்கிய காசிவிஸ்வநாதர் கோயில் குப்பத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒரு வீட்டில் தீடிரென ஏற்பட்ட ஒரு தீ பக்கத்தில் உள்ள அனைத்து குடிசைளுக்கும் பரவியது.

 

இதை கண்ட மீனவ குடும்பங்கள் வீட்டை விட்டு வெளியேறி ரோட்டிற்கு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்து பொதுமக்களிடம் உயிர் சேதம் ஏற்படாமல் பாதுகாத்தனர்.

 

இதுகுறித்து எண்ணூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது பற்றி தகவல் அறிந்த முன்னாள் எம்.எல்.ஏ, கே.குப்பன் 65 குடும்பங்களுக்கும் புடவை, லுங்கி, 5 கிலோஅரிசி வழங்கினார். மேலும் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது,

 

நேற்று நண்பகலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இளைஞர்பாசறை கே.மோகன், வட்ட செயலளார் என்.சி.குப்புராஜ், எம்.பி.காசிராஜன், வட்ட அவைத்தலைவர் சி.ஆர்.சோழபாண்டியன், வழக்கறியுர் சி.வெற்றிவேல்பாண்டியன், கிருஷ்ணமூர்த்தி, கே.மணிமாறன், எம்.சி.சூர்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

முன்னதாக திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் சுந்தரவள்ளி, ஆர்.டி.ஓ.வீரப்பன், தாசில்தார், மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு நிவாரண உதவி தொகை வழங்க ஏற்பாடு செய்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்