முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) துரை தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      பெரம்பலூர்

திங்கள்கிழமைதோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) துரை தலைமையில் நேற்று (13.02.2017) நடைபெற்றது.

மாற்றுதிறனாளிகள்

 

 

இக்கூட்டத்தில், பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 463 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர்(பொ) அவர்களிடம் நேரிடையாக அளித்தனர். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

 

மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்றிட வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொ); அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் உதவி திட்ட அலுவலர் அமர்சிங் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்