முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாட்டின் நலனை விட்டுத்தர முடியாது: மனோகர் பாரிக்கர்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூரு, அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் நாட்டின் நலன் விட்டுத்தரபட மாட்டாது என்று ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் உறுதிபடக் கூறினார்.

பாதுகாப்பு உள்பட முக்கிய துறைகளில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதிப்பதில்லை. இதற்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆதரவு அமைப்பான சுவதேஷி சக்ரான் மஞ்சி என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தநிலையில் ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் நேற்று பெங்களூரு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு சம்மதிக்காததற்கு சுவதேஷி சக்ரான் மஞ்சி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த பாரிக்கர், அன்னிய நேரடி முதலீடு விவகாரத்தில் மத்திய அரசு மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது.  ராணுவம் போன்ற முக்கிய துறைகளில் 100 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க முடியாது என்றார்.

இயந்திரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை அமைக்க நம்மிடம் தேவையான கருவிகள்,மற்றும் தொழில் நுட்பம் இல்லை. அதனால் இதுபோன்ற தொழிற்சாலைகளில் அன்னிய நேரடி முதலீடு வரவேற்கப்படும் என்றும் பாரிக்கர் மேலும் கூறினார். வெளிநாடுகளில் இருந்து மரபணு மாற்று விதைகளை இறக்குமதி செய்வதற்கும் இந்த சுவதேஷி இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்