முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழ்நமண்டி கிராமத்தில் லட்சுமி நாராயணன் கோவில் மகாகும்பாபிஷேகம்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கீழ்நமண்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கீழ்நமண்டி கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையட்டி ஞாயிறு அன்று மாலை 5 மணிக்கு அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, யாக சாலை பூஜை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம், ரக்ஷாபந்தனம், பூரணாஹ¨தி, மஹாதீபாராதனை நடைபெற்றது. நேற்று முன்தினம் திங்களன்று காலை 7 மணிக்கு 2ம் கால யாக பூஜை, கணபதி ஹோமமும், 7.30 மணிக்கு மகா பூர்ணாஹ¨தி, தீபாராதனையும், 8 மணிக்கு கலசம் புறப்பாடும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 10 மணியளவில் மகாஅபிஷேகம் அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் சுவாமி பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்றிரவு 7 மணிக்கு ஸ்ரீ பட்டாபிராமனின் பாரதியார் சொற்பொழிவும் நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேகத்துக்கான ஏற்பாடுகளை கீழ்நமண்டி அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோவில் விழாக்குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்