முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கீழ்முதலம்பேடு ஊராட்சியின் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      சென்னை
Image Unavailable

கும்மிடிப்பூண்டி அடுத்த கீழ்முதலம்பேடு ஊராட்சியின் சார்பாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் சமூக தணிக்கை தொடர்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

 

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த கீழ்முதலம்பேடு ஊராட்சியில் கடந்த 2014-2015, 2015-2016ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்ற பணிகள் குறித்த சமூக தணிக்கை பாலிகாபேட்டை கிராமத்தில் நடைபெற்றது.

 

கூட்டத்தில் தற்காலிக தலைவராக மணி தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் சாமுவேல் முன்னிலை வகித்தார். தணிக்கையாளர்களாக வட்டார வள அலுவலர் தணிகாச்சலம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ஆர்.ஸ்ரீதர் கலந்துக் கொண்டனர்.

 

தொடர்ந்து கூட்டத்தில் கடந்த 2014-2015, 2015-2016ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடைபெற்ற அனைத்து பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது, மேலும் அனைவரின் வேலை அட்டையும் ஆய்வு செய்யப்பட்டு, பணிகளின் முழுமை தன்மை அளவீடப்பட்டது.

 

மேலும் இந்த கூட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணிகளை செய்தவர்களுக்கு உரிய சம்பளம் கொடுக்கப்படுகிறதா என்று பொதுமக்களிடம் கேட்டு உறுதி செய்யப்பட்டது. கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்