முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வேலூர் மாவட்டத்தில் ரூபெல்லா தடுப்பூசி போடுவது குறித்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம்: கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைபெற்றது

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் வேலூர் மாவட்டத்திலுள்ள 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசியை இலக்கை 100 சதவிகிதம் எய்துவது குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-வேலூர் மாவட்டத்தில் 06.02.2017 முதல் கடந்த ஒரு வாரம் வரை தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய இரண்டு தொற்று நோய்களை ஒரே தடுப்பு ஊசி மூலம் தடுக்கும் இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் 9 மாதம் முடிந்த குழந்தை முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 3263 பள்ளிகளில் படிக்கும் 9 மாதம் முடிந்த குழந்தை முதல் 15 வயதிற்கு உட்பட்ட சுமார் 9.81 இலட்சம் மாணவ மாணவிகளில் இதுவரை 2.19 இலட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம் மூன்று கட்டமாக போடப்படுகிறது. இம்முகாம் முதற்கட்டமாக பள்ளிகளிலும் இரண்டாவது கட்டமாக அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொலைதூரக் கிராமங்களில் நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் நடைபெறுகிறது. மூன்றாவது கட்டமாக பள்ளிகளிலும் கிராமங்களிலும் விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிந்து போடப்படவுள்ளது. இப்பணிகளில் 600 தடுப்பூசி பணியாளர்களும், 2000 அங்கன்வாடி பணியாளர்கள், லயன்ஸ் ரோட்டரி மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.இந்த முகாமில் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழுமையாக போடுவதில் பெற்றோர்களின் அனுமதி கிடைப்பதில் சிரமம் உள்ளது ஆகவே இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மூலம் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்க பிரபல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சார்ந்த குழந்தைநல மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஆலோசனை வழங்கி உள்ளனர்.மேலும் பெரும்பாலன பள்;ளிகளில் 100 சதவிகிதம் இலக்கு எய்தப்பட்டுள்ளது இவை அந்த பள்ளி தலைமையாசிரியர்களின் சிறப்பான நடவடிக்கையால் முடிக்கப்பட்டுள்ளது. இதே போல மற்ற பள்ளிகளிலும் முடித்திட அவர்களிடம் நேரடியாக கருத்துகளை தெரியபடுத்திட வரவழைக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றம் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசியின் நன்மையை தெளிவுபடுத்தி 100 சதவிகிதம் இத்திட்டம் வேலூர் மாவட்டத்தில் நிறைவேற்ற ஒத்துழைக்கவேண்டும் மேலும் அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசியை வழங்கி பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகளை செய்து ஒரு முன்னுதாராமாக இருக்க வேண்டும். இந்த கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து வேலூரின் பிரபல தனியார் மருத்துவமணையின் குழந்தை நல மருத்துவர்கள் சந்தேகங்களுக்கு விடையளித்து உள்ளனர். தமிழக அரசு நாட்டின் மக்கள் மேல் அக்கரை கொண்டுள்ளது அதன் காரணமாகவே குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தடுப்பூசியை வழங்கி வருகிறது இவற்றில் எந்த பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை அனைத்து பாதுகாப்புகளையும் உறுதி செய்துதான் இந்த தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது பள்ளி தலைமையாசிரியர்கள் தடுப்பூசியை வழங்காத பெற்றோர்களிடம் கலந்தாலோசனை கூட்டம் நடத்தி இந்த முகாம் 100 இலக்கை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார். இக்கூட்டத்தில் துணை இயக்குநர்கள் (சுகாதார பணிகள்) மரு.கே.எஸ்.டி.சுரேஷ், வேலூர் மருத்துவ கல்லூரி குழந்தைநல தலைமை மருத்துவர் மரு.தேரணிராஐன், மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு.மணிவண்ணன், சி.எம்.சி குழந்தை நல தலைமை மருத்தவர்கள் மரு.Nஐக்கப்ஐhன், இந்திய மருத்துவ சங்க குழந்தை நல உறுப்பினர் மரு.நர்மதாஅசோக் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் மருத்துவர்கள் கலந்துக்கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்