திருமுருகன் கலை,அறிவியல் பெண்கள் கல்லூரியில் 16-ஆம் ஆண்டு விளையாட்டு விழா

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      திருவள்ளூர்
Tvallur photo2

திருவள்ளுர் அடுத்த கொசவன்பாளையத்தில் உள்ள திருமுருகன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் 16-ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா சிறப்பாக நடைபெற்றது.விழா திருமுருகன் கல்வி அறநிலைய தலைவர் எம்.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள்,கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளுர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் எஸ்.அருணா மற்றும் மீனாட்சி சுந்தரம் மேலாண்மை நிறுவனம் பேராசிரியரும்,முதல்வருமான எஸ்.சங்கரன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றி பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பரிசுகள் ,சான்றிதழ்கள் வழங்கினார்கள்.முன்னதாக கல்லூரி முதல்வர் முனைவர் என்.எல்.அமுதாயி வரவேற்புரை நிகழ்த்தினார்.கல்லூரியின் தாளாளர் டி.துரைவேலு மற்றும் அறநிலைய உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.விழாவில் பேராசிரியர்கள்,மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: