முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிநீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு பேரணி

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பாக செவ்வாய்க்கிழமை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

கோடைக் காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் சார்பாக குடிநீர் சிக்கனம் குறித்து பள்ளி மாணவர்கள், பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

 

இந்த பேரணிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் ரவி தலைமை தாங்கினார். கும்மிடிப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வனிதாராணி முன்னிலை வகித்தார்.

 

கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகம் வழியாக நடைபெற்ற இந்த பேரணியானது ரெட்டம்பேடு சாலை, மேட்டு தெரு, தபால் தெரு, நாட்டாமைக்காரன் தெரு, மணியக்கார தெரு, சாய்பாபா நகர் , கோட்டக்கரை வழியாக நடைபெற்றது.

 

பேரணியில் பங்கேற்ற மாணவிகள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி கோடைக் காலத்தை சமாளிக்க வேண்டும் என பதாகைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் சென்றனர்.

 

பேரணியில் 300க்கும் மேற்பட்ட மாணவிகளும், பேரூராட்சி ஊழியர்கள், பேரூராட்சி, சுகாதார, துப்புரவு ஊழியர்கள் பங்கேற்றனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்