உதடு பிளவு- முகமுரண்பாடுகளுக்கான சர்வதேச மருத்துவ வல்லுனர்கள் மாநாடு

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      சென்னை

உதடு பிளவு மற்றும் முக முரண்பாடுகளுக்கான 13வது கிளப்ட் 2017 சர்வதேச மாநாடு மகாபலிபுரத்திலுள்ள ரேடிசன் ப்ளூ ஓட்டலில நடைபெற்றது. . பல்வேறு நாடுகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர், . இந்தியாவில் நடைபெறுகிற இம்மாநாடு ஒலிம்பிக் போன்று உலகம் முழுவதும் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் . இந்த சர்வதேச மாநாட்டில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு. ஜக்கி வாசுதேவ் மற்றும் சார்லஸ் பி வாங், இணை நிறுவனர், ஸ்மைல் ட்ரெயின் ஆகியோர் தலைமை விருந்தினராக பங்கேற்றனர்.இம்மாநாட்டை உதடு பிளவு மற்றும் முக முரண்பாடுகளுக்கான இந்தியாவின் தெற்கு பிராந்திய சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

 

மாநாடு ஒருங்கிணைப்பு குழு தலைவர் டாக்டர் ஜோத்னா கூறும்போது, நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிற இம்மாநாடு, உலகிலுள்ள அனைத்து உதடு பிளவு மற்றும் முக முரண்பாடு மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்கிற மிகப்பெரிய நிகழ்வாகும். இருபது வருடங்களுக்கு பிறகு இம்மாநாடு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் நடைபெறுகிறது. முன்னேறிய மருத்துவ பராமரிப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்ப தேவைகளுக்கு அனைவரும் ஒருங்கிணைந்த குரலில் ஒலிக்க இம்மாநாடு மிகச்சிறந்த தளத்தை அமைத்து கொடுக்கும்.என்று அவர் தெரிவித்தார், .


 

இம்மாநாட்டில் உரையாற்றிய சத்குரு.ஜக்கி வாசுதேவ் கூறும்போது, இயற்கையின் ஒரு சிறிய குறைபாடு, ஒரு தனிநபருக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். பிளவு திருத்த மருத்துவ சிகிச்சையில் அர்ப்பணிப்புடன் செயல் பட்டு பல்வேறு நபர்களின் வாழ்வை நல்ல முறையில் மாற்றிய கிளெப்ட் 2017 கூட்டமைப்பை சேர்ந்தவர்களின் நோக்கம் நிறைவேற வேண்டுமென்றுவாழ்த்துவதாக தெரிவித்தார்,

 

இதை ஷேர் செய்திடுங்கள்: