முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் நரிகுறவர் நலவாரிய உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை : கலெக்டர் டாக்டர் பழனிசாமி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      திருச்சி
Image Unavailable

திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நரிகுறவர் நலவாரியத்தில் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகளை மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. வழங்கினார்.

நல உதவிகள்

 

 

தமிழக அரசின் சார்பில் நரிக்குறவர்களுக்கு கல்வி, மற்றுதொழில் புரிவதற்கான உதவி மற்றும் அவர்களுக்கு பல்வேறு நலஉதவிகள் வழங்குவதற்காகவும், தமிழ்நாடு நரிகுறவர் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய 18 வயது முதல் 60 வயது உட்பட்;டவராகவும், நரிகுறவர் இனத்தை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். இவ்வாரியத்தின் மூலம் இயற்கை மரணஉதவித்தொகை, இமச்சடங்கிற்கான உதவித்தொகை, கல்வித்உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கருச்சிதைவு மற்றும் கருகலைவுவிற்கான நிதிஉதவித்தொகை, மூக்கு கண்ணாடிக்கான நிதிஉதவி மற்றும் முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

 

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 633 நபர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு பல்வேறு சலுகைகள் தமிழக அரசின் சார்பில் கிடைக்க வேண்டும் என்றால் அவர்களுக்கான சாதிசான்றிதழ் அவசியமான ஒன்றாகும். சாதிசான்றிதழ் உள்ள அனைவருக்கும் புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், தேவராயநேரி பகுதியை சேர்ந்த 18 நரிகுறவர்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் நரிகுறவர் நலவாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கான புதிய உறுப்பினர் அட்டைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.தர்ப்பகராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலஅலுவலர் முத்துவடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்