முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நுகர்வோர் அனைவரும் விழிப்புடன் செயல்பட்டு தங்களது உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் : கலெக்டர் பழனிசாமி பேச்சு

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, தலைமையில் நடைபெற்றது.

பாதுகாப்பு இயக்கம்

 

 

விழாவில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது, " 1965-ல் அமெரிக்காவில் ரால்ப் நாடர் என்பவரால் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் தேற்றுவிக்கப்பட்டது. 15.03.1965 –ல் அமெரிக்க ஜனாதிபதி ஜான்எஃப்கென்னடி நுகர்வோர் உரிமைகளை அறிவித்து நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை அறிமுகம் செய்தார். அதனைத் தொடர்ந்து, 15.03.1973 –ல் அமெரிக்க நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை இயற்றிய நாள் உலக நுகர்வோர் தினமாக அனுசரிக்கப்பட்டது. ஐ.நா.சபை 1985-ல் நுகர்வோர் உரிமைகளுக்கு அங்கீகாரம் அளித்தது. இந்தியாவில் 24.12.1986-ல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் இயற்றப் பட்டது.

 

நுகர்வோர் என்றால் பணம் கொடுத்து பொருளை வாங்குபவர், பணம் கொடுத்து சேவை பெறுபவர் நுகர்வோர் ஆவார். அந்த வகையில் அனைத்து குடிமக்களும் நுகர்வோரே. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நுகர்வோருக்கு சில உரிமைகளை அளிக்கிறது. அதாவது உயிருக்கும், உடைமைக்கும் ஊறு விளைவிக்கின்ற பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக நுகர்வோர் பாதுகாக்கப்பட வேண்டும். நியாயமற்ற வணிக நடவடிக்கைகளிலிருந்து நுகர்வோர் பாதுகாப்பு பெற, பொருட்களின் தரம், அளவு, வீரியம், தூய்மை நிலை, விலை ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். நியாயமற்ற வணிக நடவடிக்கைகளால் அல்லது தகாத முறையில் சுரண்டப்படுவதற்கு எதிராக பரிகாரம் தேடுவதற்குரிய உரிமைகளை அளிக்கிறது.

காசு கொடுத்து ஒரு பொருளையோ, சேவையையோ தன் சொந்த உபயோகத்திற்காக பெறும் ஒருவர் தான் வாங்கும் பொருட்களுக்கு அதிகபட்ச விற்பனை விலை குறிப்பிடப் பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்கிய பொருளுக்குரிய இரசீது பெற வேண்டும். அவ்வாறு ரசீதுடன் நுகர்வோர் வாங்கிய பொருட்களில், சேவைகளில் குறைபாடுகள் இருந்தாலோ, சட்டத்திற்று புறம்பாக அல்லது அறிவிக்கப்பட்ட அல்லது குறிப்பிட்ட விலைக்கு அதிகமாக விலை பெற்றிருந்தாலோ நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் அளிக்கலாம் நுகர்வோர் மன்றத்தின் மூலம் வழக்கு தொடர்ந்து, தங்களது சேவை குறைபாட்டிற்குரிய இழப்பீட்டினை பெறலாம். மேலும் அரசின் திட்ட செயல்பாடுகளில் ஏதெனும் குறைகள் இருப்பின் அதைப் பற்றியும் நீங்கள் புகார் அளிக்கலாம். எனவே நீங்கள் அனைவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றி தெரிந்திருக்க வேண்டும்" என தெரிவித்தாh.;

பின்னர் கவிதை, கட்டுரை, வரைகலை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும், மாவட்டத்திலுள்ள அங்காடிகளில் "அம்மா உப்பினை" அதிக அளவு விற்பனை செய்த விற்பனையாளர்கள் கே.நந்தகோபால்(தரங்கம்பாடி) -க்கு முதல் பரிசாக ரூ.2500-ம், ஏ.ஜெ.முத்து(தரங்கம்பாடி) -க்கு இரண்டாம் பரிசாக ரூ.1500-ம், வி.இராமலிங்கம்(நாகப்பட்டினம்) -க்கு மூன்றாம் பரிசாக ரூ.1000-ம் மாவட்ட கலெக்டர் சு.பழனிசாமி, வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்(பொ) வெங்கடேசன்;, பெட்காட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.குழந்தைவேலு, தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்புக் குழுத் தலைவர் எஸ்.பாஷ்யம் (நாகப்பட்டினம்), மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்