முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட நெல், வாழை, மஞ்சள், கருணைக்கிழங்கு பயிர்கள் : கலெக்டர் கோவிந்தராஜ் சிறப்பு ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், ஆண்டான்கோவில் மேற்கு, குளித்தலை வட்டம், குளித்தலை, நங்கவரம் வடக்கு1 மற்றும் 2, தோகமலை, நெய்தலூர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பாதிப்பு

 

 

இந்த ஆய்வில் ஆண்டான்கோவில் மேற்கு பகுதிகளில் விவசாயம் செய்யப்பட்டு வறட்சியால் பாதிக்ககப்பட்ட வாழைத்தோட்டம், மஞ்சள் சாகுபடி பரப்புகள், கருணைக்கிழங்கு சாகுபடி ஆகியவற்றை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் அவர்களிடம் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு வழக்கத்திற்கு அதிகமாக செலவுகள் செய்து விட்டோம், உரிய நிவாரணம்; பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

 

குளித்தலை வட்டம், குளித்தலை, நங்கவரம் வடக்கு 1 மற்றும் 2 ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் நெல் சாகுபடிகளையும், தோகமலை, நெய்தலூர் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த வாழை மற்றும் நெல் சாகுபடிகளையும் வறட்சியால் பாதிக்கப்பட்டதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக தமிழ்சோலை கிராமப்பகுதிகளில் சீமைக்கருவேல் மரம் அகற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியரிடம் அங்கிருந்த பொதுமக்கள் கூடுதலாக குடிநீர் வழங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

இந்த ஆய்வின் போது வேளாண்துறை இணை இயக்குநர் அல்தாப், வருவாய் கோட்டாட்சியர்கள் பாலசுப்பிரமணியம் (கரூர்), சக்திவேல் (குளித்தலை), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில், வட்டாட்சியர்கள் அம்பாயிரநாதன் (மண்மங்கலம்), சக்திவேல் (குளித்தலை) உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்