முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரம்பலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் : முதன்மைக்கல்வி அலுவலர் முனுசாமி தகவல்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள மார்ச் 2017 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள், தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஷஷசிறப்பு அனுமதி திட்டத்தின்;|| (தக்கல்) கீழ் (வுயவமயட) ஆன் லைனில் 16.02.2017 (வியாழக்கிழமை) மற்றும் 17.02.2017 (வெள்ளிக்கிழமை) ஆகிய இருநாட்களில் காலை 10.00 மணி முதல் 05.45 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தனி தேர்வர்கள்

 

 

விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் அரசு தேர்வு சேவை மையமாக ஆண்களுக்கு பெரம்பலூர் அரசுமேல்நிலைப்பள்ளியிலும் பெண்களுக்கு பெரம்பலூர் புனித தோமினிக் (பெ)மேல்நிலைப் பள்ளிக்கு நேரில் சென்று ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அரசு தேர்வு சேவை மையங்களில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் விவரத்தை றறற.னபந.வn.பழஎ.in என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள் செலுத்த வேண்டிய தேர்வுக்கட்டணத் தொகை ரூ.125- இவற்றுடன் கூடுதலாக சிறப்பு அனுமதி கட்டணமாக ரூ.500- மற்றும் ஆன்-லைனில் பதிவுக் கட்டணமாக ரூ.50- உட்பட மொத்தம் ரூ.675- ஐ சேவை மையங்களில் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வர் தான் விண்ணப்பித்த பாடங்கள் தான் பதியப்பட்டுள்ளதா என்பதை கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். சேவை மையத்தில் ஏற்கனவே ளுளுடுஊ தேர்வெழுதி தோல்வியுற்றவர்கள், தோல்வியுற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றொப்பமிட்ட நகல்கள் மற்றும் அறிவியல் பாட செய்முறை வகுப்பில் கலந்து கொண்டதற்கான தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட அத்தாட்சி சான்று, நேரடியாக முதன்முறையாக ளுளுடுஊ தேர்வெழுதுவோர், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான அசல் மாற்று சான்றிதழ் - அசல் நுளுடுஊ சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். இத்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறை வகுப்பில் கலந்து கொண்டதற்கான தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட அத்தாட்சி சான்றினை இணைக்க வேண்டும். தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் செய்தித்தாளில் அறிவிக்கப்படும். இத்திட்டத்தின் கீ;ழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் திருநெல்வேலி, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் மட்டுமே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மைய விவரம் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் குறிப்படப்படும். தனித்தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது. தனித்தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.

 

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்