முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொத்துக்குவிப்பு வழக்கில் 8 நிமிடத்தில் தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி   - சொத்துக்குவிப்பு வழக்கில் நேற்று பரபரப்பு தீர்ப்பை வழங்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே. காலை 10.32 மணிக்கு நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் அமிதவ ராய் இருக்கைக்கு வந்தனர். 6-ம் எண் அறையில் நிறைய வழக்கறிஞர்களும் ஊடகவியலாளர்களும் குழுமியிருந்தனர். நீதிமன்ற ஊழியர் மிகப்பெரிய தீர்ப்பு அடங்கிய சீலிட்ட உறையை திறக்க, இரண்டு நீதிபதிகளும் சில கணங்கள் விவாதித்தனர்.

பேரமைதி நிலவ நீதிபதி கோஸ், தீர்ப்பை அளிக்கும் முன், “தீர்ப்பின் சுமையை நாங்கள் எடுத்துக் கொண்டோம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்” என்றார். உடனேயே நீதிபதி கோஸ், தீர்ப்பின் முக்கியமான பகுதியை வாசிக்கத் தொடங்கினார். 10.40க்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை நீதிபதி கோஸ் வாசித்தவுடன் நீதிமன்ற அறையின் பேரமைதி கலைந்தது, பத்திரிகையாளர்களும், சில வழக்கறிஞர்களும் தீர்ப்பின் விவரங்களை அளிக்க வேகமாக அறையை விட்டு வெளியேறினர். இந்த காட்சிகளுக்கிடையே நீதிபதி ராய், “சமுதாயத்தில் அதிகரித்து வரும் ஊழல் என்ற அச்சுறுத்தல் குறித்து நாங்கள் எங்கள் கவலைகளை இந்த தீர்ப்பின் மூலமாக வெளிப்படுத்தியுள்ளோம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்