தமிழகத்தில் இப்போதைக்கு ஆட்சி அமைக்கும் திட்டமில்லை: அன்பழகன் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      அரசியல்
Anbalagan 2017 02 14

சென்னை, தமிழகத்தில் அடுத்து யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து ஆட்சி அமைப்பது குறித்து திமுக-வுக்கு எவ்வித திட்டமும் இல்லை என அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் யார் ஆட்சி செய்வது என்ற ரீதியில் குழப்பமான சூழல் நிலவி வருகிறது. ஆளும் அதிமுக சார்பில் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவிடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனிடையே அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.வருமானத்திற்கு புறம்பாக 211% அதிகமாக சொத்துக் குவித்ததாக சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, முதலமைச்சராக பொறுப்பு ஏற்க முடியாது. இதைத் தொடர்ந்து அதிமுக கட்சியினுள் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. எடப்பாடி பழனிச்சாமி, சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என தீர்ப்பு வெளியானது குறித்து கருத்து தெரிவித்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், தமிழகத்தில் ஆட்சி அமைக்க திமுக யாருக்கும் ஆதரவளிக்காது. மேலும் தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் ஆட்சி அமைப்பது குறித்து திமுக-விடம் எவ்வித திட்டமும் இல்லை என அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: