முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திரைப்படங்களில் வரும் தேசிய கீத இசைக்கு ரசிகர்கள் எழுந்து நிற்க தேவை இல்லை - சுப்ரீம் கோர்ட் கருத்து

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : திரைப்படங்களில் வரும் காட்சிகளில் தேசிய கீதம் ஒலிக்கப்படும்போது ரசிகர்கள் எழுந்து நிற்கவேண்டிய அவசியமில்லை என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

இசைக்க உத்தரவு

திரையரங்குகளில் படங்கள் திரையிடப்படும் முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை கடந்த நவம்பர் 30-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் பிறப்பித்தது.
இதுதொடர்பாக ஷியாம் நாராயண் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்படவும், அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுவது தொடர்பாக உரிய விதிமுறைகளை உருவாக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு மீது நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவா ராய் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு: தேசிய கீதத்துக்கும், தேசிய கொடிக்கும் மதிப்பளிக்க வேண்டியது, ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

மரியாதை செலுத்தனும்

இது எனது தாய் நாடு என்ற உணர்வு, நம் அனைவருக்கும் மேலோங்க வேண்டும். நாடு முழுவதும் திரையரங்குகளில் ஒவ்வொரு காட்சி தொடங்கும் முன்னரும் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்; அப்போது, பார்வையாளர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும்.

சுற்றறிக்கை

தேசிய கீதம் இசைக்கப்படும் போது, திரையில் தேசியக் கொடியை காட்ட வேண்டும். விரும்பத்தகாத பொருள்களின் அட்டைகளில் தேசிய கீதத்தில் உள்ள வரிகள் அச்சிடப்படுவதை தடுக்க வேண்டும். தேசிய கீதத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் ஆதாயம் அடைவதை அனுமதிக்கக் கூடாது. இசை, நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் இசைக்கப்படக் கூடாது. மேற்கண்ட உத்தரவுகளை, ஒரு வாரத்துக்குள் செயல்படுத்த வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளின் தலைமை செயலர்களுக்கும் மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மனு தாக்கல்

இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், படத்தின் இடையில் வரும் காட்சிகளிலும் நியூஸ் ரீல் மற்றும் ஆவணப்படங்களிலும் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டாலும் எழுந்து நிற்கவேண்டுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.  இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர். பானுமதி ஆகியோர் தெரிவித்த கருத்தில் படத்தின் காட்சிகள், செய்திப்படம் மற்றும் ஆவணப்படங்களில் தேசிய கீதம் இசைக்கப்படும்போது பார்வையாளர்கள் எழுந்து நிற்க தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒத்திவைப்பு

இவ்விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட வேண்டியுள்ளதால் இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago