முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். புதிய வெளியுறவுத் செயலாளராக தெஹ்மினா ஜன்ஜூவா நியமனம்

செவ்வாய்க்கிழமை, 14 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுத் செயலாளராக தெஹ்மினா ஜன்ஜூவா நியமிக்கப்பட்டுள்ளார்.

அய்ஜாஸ் தூதராக நியமனம்

பாகிஸ்தான் நாட்டின் வெளியுறவுத் துறை செயலாளராக இருந்த அய்ஜாஸ் அகமது சவுத்ரி அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதராக நியமிக்கப்பட உள்ளார். இதனால், புதிய வெளியுறவுச் செயலாளர் விரைவில் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டு வந்தது.

புதிய செயலாளர்

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் புதிய வெளியுறவுத் செயலாளராக தெஹ்மினா ஜன்ஜூவா நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.  ஐ.நா.விற்கான பாகிஸ்தானின் நிரந்திர பிரதிநிதியாக தெஹ்மினா இருந்து வருகிறார். தெஹ்மினா பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளராக மார்ச் முதல் வாரத்தில் பதவியேற்க உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

பிரதமர் ஒப்புதல்

தெஹ்மினா உள்ளிட்ட பலரும் வெளியுறவு செயலாளர் பதவிக்கு போட்டியில் இருந்தனர். இதில் தெஹ்மினாவை வெளியுறவுத் துறை செயலாளராக நியமிக்க பிரதமர் நவாஸ் ஷெரீப் ஒப்புதல் அளித்துள்ளார். இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதராக உள்ள அப்துல் பாசித் அந்நாட்டின் புதிய வெளியுறவுத் துறை செயலாளராக விரைவில் நியமிக்கப்படலாம் என்ற செய்தியும் சில தினங்களாக வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்