முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலீதின் பைகள் பயன்படுத்திய நிறுவனங்களுக்கு ரூ.18,800 அபராதம்

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை மாநகராட்சியை தூய்மையான, பசுமையான மாநகராட்சியாக மாற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக அருள்மிகு மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதி முதல் வெளி வீதி வரையுள்ள முக்கிய பகுதிகளில் ஜனவரி 1, முதல் பிளாஸ்டிக் பைகள் தடை செய்யப்பட்டு பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு வெகுவாக குறைந்துள்ளது.

மேலும் ஆணையாளர்  சந்தீப் நந்தூரி   உத்தரவின்பேரில்  சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு மதுரை மாநகராட்சி மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள நான்கு சித்திரை வீதிகள், நான்கு ஆவணி மூல வீதிகள், நான்கு மாசி வீதிகள், பெரியார் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் 50 மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய 22 கடைகளில் 443 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதத் தொகையாக ரூ.18,800 வசூலிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பாலிதீன் பைகளை ஆணையாளர்  சந்தீப் நந்தூரி  பார்வையிட்டு 50 மைக்ரான்களுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார். மேலும் சித்திரை வீதி தளவாய் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோர கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என ஆணையாளர் அவர்கள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு 50 மைக்ரான் கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதை தவிர்த்து துணிப்பைகள், சணல்பைகள் மற்றும் பேப்பர் பைகளை பயன்படுத்துமாறு ஆணையாளர்  கூறினார்.

இந்த ஆய்வின் போது சுகாதார அலுவலர்  .இளையராஜா,  .சுப்புராஜ், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்