முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இசேவை மையங்களில் புதிய வாக்காளர்கள் அடையாள அட்டை பெற சிறப்பு ஏற்பாடு

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இ சேவை மையங்களில் புதிய வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

01-01-2017-ஐ தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி வரைவுப்பட்டியல் வெளியீட்டுடன் தொடங்கியது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், இடமாற்றம் செய்ய விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பெறப்பட்டன. மொத்தம் 27ஆயிரத்து 65 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 25ஆயிரத்து 275 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. அவர்கள், கடந்த ஜனவரி 5-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்;. மேலும், இடப்பெயர்ச்சி, இறப்பு மற்றும் இரட்டை பதிவு ஆகியவற்றின் காரணமாக ஆயிரத்து 554 பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது.

புதிய வாக்காளர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பத்தில் தங்களின் கைப்பேசி எண்ணை அளித்துள்ள புதிய வாக்காளர்களுக்கு ஒரு தனிப்பட்ட அடையாள எண், குறுஞ்செய்தி தேர்தல் ஆணையத்தால்; அனுப்பப்படும். இந்த அடையாள எண்ணை தங்கள் பகுதிக்கு அருகில் உள்ள இ-சேவை மையத்தில் காண்பித்து வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.

தங்களுடைய கைபேசி எண்ணை அளிக்காத புதிய வாக்காளர்கள், தேர்தல் துறையின் கட்டணமில்லா உதவி எண்1950-ஜ தொடர்புகொண்டு கைப்பேசி எண்ணை பதிவுசெய்ய வேண்டும். அவர்களுக்கும் அடையாள எண் அனுப்பப்படும். அவர்களும் தங்களுடைய ஏதேனும் ஒரு புகைப்பட அடையாளச் சான்றை காண்பித்து இ-சேவை மையங்களில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் முனைவர் ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்