முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுகுளத்தூர் தாலுகா கொண்டுலாவியில் மக்கள் தொடர்பு முகாம்

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,-      ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா கொண்டுலாவியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலெக்டர் முனைவர் நடராஜன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

           மக்கள் தொடர்பு திட்டம் 

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டம், கொண்டுலாவி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பாக  95 பயனாளிகளுக்கு ரூ.41லட்சத்து 32ஆயிரத்து 653 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை வழங்கினார்.  மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பாக 11 பயனாளிகளுக்கு ரூ.18,784 மதிப்பிலான விலையில்லா காதொலிக்கருவிகள், சூரியமின்கலங்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் ஊன்றுகோல்களையும், முதுகுளத்தூர் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தின் மூலம் 47 பயனாளிகளுக்கு ரூ.5,01,500 மதிப்பிலான மாதாந்திர உதவித்தொகைக்கான காசோலைகள் மற்றும்   இலவச வீட்டுமனைப் பட்டா ஆணைகளையும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தின் சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.8ஆயிரம்  மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களையும், மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பாக 4 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும்,  புதுவாழ்வு திட்டத்தின் சார்பாக 17  மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.8,20,000 மதிப்பிலான கடனுதவிகளையும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பாக தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.19,00,838 மதிப்பில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் எக்ஸ்ரே ஆய்வுக் கூடம் அமைப்பதற்கு கடனுதவியினையும்,  தாட்கோ அலுவலகத்தின்; சார்பாக இளைஞர்களுக்கான சுயவேலைவாயப்புத் திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.3லட்சம் மதிப்பில் மொபைல் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் தொழில் செய்வதற்கு கடனுதவிகளையும், தோட்டக்கலைத்துறையின் சார்பாக 2 பயனாளிகளுக்கு ரூ.2,280 மதிப்பிலான பேட்டரி ஸ்பிரேயர்கள் மற்றும்  கைத்தெளிப்பான்களையும், வேளாண்மைத் துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.61,075 மதிப்பில் மானியத்துடன் கூடிய ஆயில் என்ஜின் மற்றும் விசைத்தெளிப்பான்களையும்;, வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பாக 5 பயனாளிகளுக்கு ரூ.5,20,176 மதிப்பில் மானியத்துடன் கூடிய திரும்பும் ஆடீ கலப்பை, இயந்திர  களையெடுக்கும் கருவி, சுழல் கலப்பை  மற்றும் பவர் டில்லர்களையும் ஆக மொத்தம் 95 பயனாளிகளுக்கு ரூ.41,32,653 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:- பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து உடனடி தீர்;வு காணும் விதமாகவும், கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஏதுவாகவும் மாதந்தோறும் ஒவ்வொரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  இம்முகாமில் அரசு செயல்படுத்தி வரும்  திட்டங்கள் குறித்தும், அத்திட்டங்களின் மூலம் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம்  விளக்கி கூறப்படுகிறது.  இன்று நடைபெறும் இம்முகாம் குறித்து இக்கிராம பொதுமக்களுக்கு முன்னதாக அறிவிப்பு செய்யப்பட்டு, பொதுமக்களிடமிருந்து  பல்வேறு கோரிக்கைகள் வேண்டி மொத்தம் 160 முன் மனுக்கள் பெறப்பட்டிருந்தன. அம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்;வு காணப்பட்டுள்ளது. இதுதவிர இன்றைய முகாமில் தகுதியான மனுதாரர்களை தேர்வு செய்து மொத்தம் 95 பயனாளிகளுக்கு ரூபாய் 41 இலட்சத்து 32 ஆயிரத்து  653  மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது . 

             கருவேலமரங்கள்

மேலும் கடலாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் சார்பாக கொண்டுலாவி கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1.46 கோடி மதிப்பில் கிடாத்திருக்கையிலிருந்து கொண்டுலாவி, எஸ்.பி.கோட்டை வழியாக சித்திரங்குடி வரையிலான சாலை அமைத்திடும் பணிகளுக்காகவும்,  ரூ.5.00 லட்சம்  மதிப்பில் கொண்டுலாவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தரைதளத்தினை சரிசெய்திடும் பணிகள்,  பைப்லைன் ,சின்டெக்ஸ் மற்றும் கழிப்பறை அமைத்திடும் பணிகளுக்காகவும், ரூ.3.00 லட்சம் மதிப்பில் கொண்டுலாவி கிராமத்தில் குடிநீர் இணைப்பு அமைத்திடும் பணிகளுக்காகவும், ரூ.2.00  லட்சம் மதிப்பில் எஸ்.பி.கோட்டை கிராமத்தில் குடிநீர்; இணைப்பு அமைத்திடும் பணிகளுக்காகவும், ரூ.15 ஆயிரம் மதிப்பில் எஸ்.பி.கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு மெயின் கேட் பொருத்தும் பணிகளுக்காகவும்  என ஆக மொத்தம் 5 பணிகளுக்கு ரூ.1,97,47,653 மதிப்பில் நிர்வாக அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது.  விரைவில் அனைத்து பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இதுதவிர சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவின் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றுவதில் பொதுமக்களின் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும்.  தனியார் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து வேருடன் அகற்றி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்கள் இல்லாத நிலையினை உருவாக்கிட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். இவ்வாறு பேசினார். அதனைத் தொடர்ந்து, கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் கிடாத்திருக்கை கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார்.  பின்பு கடலாடி ஊராட்சி ஒன்றியம், கடுகுசந்தை சத்திரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பயிர் அறுவடை பரிசோதனை பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இம்முகாமில்  பரமக்குடி சார் ஆட்சியர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஆர்.அரிவாசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் மரு.தி.மோகன்,  சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி, மாவட்;ட சமூக நல அலுவலர் குணசேகரி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பழனியம்மாள் உள்பட  பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்