முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாம்பன் பகுதியில் மீனவரின் மீன்பிடி வலையில் யானை முகம் கொண்ட அபூர்வ திருக்கை மீன் சிக்கியது.

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமேசுவரம்,பிப்,16: பாம்பன் பகுதியில் மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய மீனவர் ஒருவரின் மீன்பிடி வலையில் 137 கிலோ  எடையளவுடன் கூடிய யானை முகம் கொண்ட திருக்கை மீன் ஒன்று புதன் கிழமை சிக்கியிலிருந்தது. 

 

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் டால்பின்,திமிங்களும், பல்வேறு வகைகளை சேர்ந்த திருக்கை மீன்கள்,கடல் பசு,கடல் பன்றி உள்பட பல்வேறு வகையான அரியவகையான மீன்களும், மாஉலா,சீலா,பாறை போன்ற வகையான மீன்கள் அதிகமாக வசித்து வருகி்ன்றன.இவைகள் சீசனுக்கு ஒன்று போல் கடலில் இடம் பெயர்ந்து செல்லும்.அப்போது மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க விரிக்கும் வலையில் சில நேரங்களில் டன் கணக்கில் இந்த மாதிரியான மீன்கள் சிக்கும்.இந்த நிலையில் பாம்பன் பகுதியிலிருந்து செவ்வாய்க்கிழமை காலையில் 95 படகுகளில் 450 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க  கடலுக்கு சென்றனர்.இவர்கள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ஆழ்கடலில் சென்று மீன்களை பிடித்துக்கொண்டு புதன் கிழமை காலையில் கரை திரும்பி வந்தனர்.இதில் சில படகில் சென்ற மீனவர்களுக்கு 3 முதல் 3 அரை அடி நீளம் வரை அளவு கொண்ட சீலா மீன்கள் தலா 150 கிலோ முதல் 200 கிலோ வரை கிடைத்திருந்தது.

சில மீனவர்களுக்கு பாறை மீன்கள் 200 கிலோ முதல் 300 கிலோ வரையிலும் கிடைத்திருந்தது.ஒரு மீனவரின் மீன்பிடி வலையில் 137 கிலோ எடையளவுடன் கூடிய யானை முகம் கொண்ட தந்தத்துடன் கூடி அரிய வகையான திருக்கை மீன் ஒன்று சிக்கியிருந்தன. இந்த மீன் உணவுக்கு சுவையாக இருக்கும் என்பதால் வெளி நாடுகளில் அதிகமான வரவேற்பு இருக்கும்.மேலும் இந்த திருக்கை மீனை வியாபாரிகள் ஒரு கிலோ ரூபாய் 90 என விலை பேசி ரூபாய் மொத்தமாக 12 ஆயிரத்துக்கு வாங்கினார்கள். அது போல சீலா மீன்கள் மற்ற மீன்களை அளவு வாரியாக பிரித்து  ஒரு கிலோ மீனை ரூபாய் 300 முதல் ரூபாய் 450 வரை விலை கொடுத்து  வியாபாரிகள் வாங்கினார்கள்.இந்த மீன்களையும் கூடுதல் விலைக்கு வியாபாரிகள் வாங்கி சென்றனர்.  இதனால் மீன்பிடிக்க சென்ற செலவீணத்தோடு அதிகமான லாபம் கிடைத்ததால் மீன்களை பிடித்து வந்த மீனவர்கள் புதன் கிழமை மகிழ்ச்சியடைந்தனர்..

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்