முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட கொரியா அதிபரின் சகோதரர் மலேசியாவில் படுகொலை : வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

பியாங்யாங்  - வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னின் சகோதரர் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபர் கிம் ஜாங் உன்
உலக நாடுகளின் தடை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கண்டனத்துக்கு உள்ளாகி வரும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன், அணு ஆயுதங்களையும், கண்டம்விட்டு கண்டம் பாயும் நவீனரக ஏவுகணைகளையும் வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அவ்வப்போது தொடர்ந்து பரிசோதித்து வருகிறார்.இந்நிலையில், கிம் ஜாங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான (தந்தையின் சகோதரர் மகன்) கிம் ஜாங் நாம் மலேசியாவில் படுகொலை செய்யப்பட்டதாக தென்கொரிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் இந்த வழக்கில் வியட்நாம் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தீவிர விசாரணை
இந்நிலையில், கிம் ஜாங் உன்-னின் ஒன்றுவிட்ட சகோதரரான (தந்தையின் சகோதரர் மகன்) கிம் ஜாங் நாம் மலேசியாவில் கடந்த 3 நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மலேசிய போலீசார் வியட்நாம் நாட்டு பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒரு வெளிநாட்டு பெண்ணை கைது செய்துள்ளதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

3 பேருக்கு வலை
இந்த கொலையில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை போலீசார் தேடி வருவதாகவும், வெளிநாட்டை சேர்ந்த ஒரு கும்பலின் சதி திட்டப்படி, இரண்டு பெண்கள் கிம் ஜாங் நாம்-ஐ கொன்றதாக சந்தேகிக்கப்படுவதாகவும் மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்