முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரி ஏய்ப்பு விவகாரம்: சானியா மிர்சா வேண்டுகோள்

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : அமெரிக்காவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் சானியா மிர்சா பங்கேற்க செல்வதால் விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது என்று மத்திய சேவை வரித்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சானியாவுக்கு சம்மன்

தெலுங்கானா அரசின் தூதராக 2014-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு மாநில அரசு ரூ.1 கோடி ஊக்கத்தொகையாக வழங்கியது. இந்த தொகைக்கு சானியா மிர்சா சேவை வரி எதுவும் செலுத்தவில்லை.  இதையடுத்து மத்திய சேவை வரித்துறையின் ஐதராபாத் மண்டல முதன்மை கமிஷனர் அலுவலகம் சார்பில் சானியா மிர்சாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதில் சேவை வரி ஏய்ப்பு விசாரணைக்காக இன்று சானியா மிர்சாவோ அல்லது அவரது பிரதிநிதியோ உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

விலக்கு அளிக்க வேண்டுகோள்

ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க செல்வதால் தன்னால் இந்த விசாரணைக்கு நேரில் ஆஜராக இயலாது என்றும், தனக்கு பதிலாக பிரதிநிதி ஒருவர் ஆஜராக அனுமதி அளிக்க வேண்டும் என்றும் சானியா மிர்சா தரப்பில் மத்திய சேவை வரித்துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago