முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வந்த அரசியல் சூழ்நிலைகளை தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு நேற்று காலை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நல்லாசியுடன் கழக பொதுச்செயலாளர் சின்னம்மா சசிகலா நல்லஆதரவுடன் தமிழக சட்டமன்ற அ.தி.மு.க. கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர்ராவ் ஆட்சி அமைக்கும்படி அழைப்பு விடுத்தார். இதன்மூலம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களிடையே நிலவி வந்த வதந்திகள் மற்றும் அரசியல் அசாதரண சூழ்நிலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆளுநர் ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த தகவல் கிடைத்ததும் மாநிலம் முழுவதும் உள்ள கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் நிம்மதி பெருமூசு;சு விட்டு உற்சாகமடைந்தனர். தமிழகம் முழுவதும் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதேபோல், ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர்.

    ராமநாதபுரம் நகரில் அ.தி.மு.க. நகர் செயலாளர் அங்குச்சாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் அரண்மனை மற்றும் புதிய பஸ்நிலையம், பழைய பஸ்நிலைய பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசுகளை வெடித்து கொண்டாடினார். அப்போது அவர் கூறியதாவது:- முன்னாள் முதல்அமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியுடன் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள சின்னம்மா சசிகலாவிற்கு துரோகம் இழைக்கும் வகையில் சிலர் செயல்பட்டு கட்சிக்கும், தொண்டர்களுக்கும், அரசியல்நிலவரத்திற்கும் எதிராக செயல்பட்டனர். ஆனால், அ.தி.மு.க. தொண்டர்கள் எதற்கும் கலங்க மாட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் தொண்டர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உறுதியான மனப்பாங்குடன் நின்று வெற்றி பெற்றுள்ளனர். இதன் பயனாக ஆளுனர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்து எடப்பாடி பழனிச்சாமி முதல்அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இதன்மூலம் தொண்டர்களின் எஃகு கோட்டையான அ.தி.மு.க.வை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபனமாகி உள்ளது. இவ்வாறு கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago