முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரக்கோணம் மயானகொள்ளை உற்சவம்: 26ந்தேதி நடக்கிறது

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      வேலூர்

அரக்கோணம் மயான கொள்ளை உற்சவம் வரும் 26ந்தேதி வெகு சிறப்பாக நடக்க இருக்கிறது. இது குறித்து ஸ்ரீஅங்காள அம்மன் ஆலய கமிட்டி நிர்வாகிகள் மற்றும் அரக்கோணம் வட்ட பர்வத ராஜகுல (மீனவர்) முன்னேற்ற சங்கத் தலைவர் சி.கணேசன், செயலாளர் எம்.செல்வம், இணை செயலாளர் ஆர்.சிதம்பரம், மற்றும் பொருளாளர் ஈ.சிவாஜி ஆகியோர் வெளியிட்ட பத்திரிகை செய்தியில் கூறியிருந்ததாவது. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரம், பழனிப்பேட்டையில் ஸ்ரீஅங்காள அம்மன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயமானது நூற்றாண்டுகள் பழமை கொண்டது. இந்த ஆலய கமிட்டியின் சார்பில் 2017-ஆம் ஆண்டு மயான கொள்ளை உற்சவம் வரும் 26ந் தேதி வெகு விமரிசையாக கொண்டாட உள்ளது. இந்த உற்சவத்தினை முன்னிட்டு 25ந் தேதி இரவு ஏழு மணிக்கு கரக உற்சவம் நடக்கிறது, மறுதினம் 26ந்தேதி 7-30 மணியளவில் அம்மனுக்கு அபிஷேகமும், பகல் 11 மணியளவில் மலர் அலங்காரமும், அதனை தொடர்ந்து பிற்பகல் 2-30 மணியளவில் மயான கொள்ளை உற்சவம் நடக்கிறது. அம்மன் மயானத்தை நோக்கி புறப்பட்டு செல்லும் போது அம்மன் வேண்டுதலை முன்னிட்டு ஆன்மீக பக்தர்கள், காளி, காட்டேரி வேடமணிந்தும். சிலர் தொங்கு காவடி எடுத்து செல்வதும். மற்றும் மெய்சிலிர்க்க வைக்கும் விதங்களில் சிலர் முதுகு புறத்தில் அலகு குத்தி ஆட்டோ, கார், வேன் போன்ற கனரக வாகனங்களை கயிற்றால் கட்டி இழுத்து செல்வதையும்; காணலாம். மேலும், அன்று இரவு ஆலயத்தின் அருகில் திரைப்படமும் காண்பிக்க உள்ளது. 28ந் தேதி 12 மணிக்கு வசந்த உற்சவம், அன்று இரவு 7 மணியளவில் ஊஞ்சல் உற்சவமும், 1ந் தேதி இரவு 08 மணிக்கு கும்பமும் நடக்க இருக்கிறது. மாவட்ட அளவில் மிகப்பெரிய விழாவாக அரக்கோணத்தில் கொண்டாடப்படுவதால்;. இவ்விழாவில் ஆந்திர மாநிலம், உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்தும் ஆயிரகணக்கில் ஆன்மீக பக்தர்கள் கூடுவார்கள். எனவே, பாதுகாப்பு பணிகளில் அதிக அளவிலான போலிசாரும் ஈடுபடுத்த உள்ளனர். எனவே, ஆன்மீக பக்தர்கள் அம்மன் அருள் பெற அச்சமின்றி திரண்டு வாருங்கள். என நிர்வாகிகள் வெளியிட்ட பத்திரிகை செய்தியில் இவ்வாறு கூறியிருந்தனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago