கவர்னர் எடுத்த முடிவு : ஸ்டாலின் வரவேற்பு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      அரசியல்
mk stalin(N)

சென்னை  -  தமிழக அரசியல் விவகாரம் தொடர்பாக கவர்னர் எடுத்த முடிவை மு.க ஸ்டாலின்  வரவேற்றுள்ளார். இது தொடர்பாக திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்  அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்பது குறித்து உங்கள் கருத்து என்ன?என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்குப் பதிலளித்த ஸ்டாலின், ''கடந்த பல நாட்களாக தமிழகத்தில் குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது. இத்தகைய நிலையிலிருந்து தமிழகத்தை காப்பாற்றிட, தமிழக ஆளுநர் உடனடியாக ஒரு நிலையான ஆட்சி தமிழகத்தில் அமைத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வந்தோம். ஆளுநரை நேரடியாக சந்தித்து இதனை வலியுறுத்தியும் இருந்தோம்.

அதனைத் தொடர்ந்து திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு கூடி, இதே கோரிக்கையை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி மீண்டும் அதனை சுட்டிக்காட்டி இருக்கிறோம். இந்தநிலையில் ஆளுநர் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். காலம் கடந்து அவர் இந்த முடிவை எடுத்திருந்தாலும், உள்ளபடியே வரவேற்கக்கூடியது. ஆனால், 15 நாட்கள் கெடு விதித்து இருக்கிறார். இது மிகப்பெரிய கால அவகாசமாக உள்ளது. எதற்காக இந்த 15 நாட்கள் கால அவகாசம் என்பது புரியவில்லை.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: