தென்காசி எம்.கே.வி.கே மெட்ரிக் பள்ளியில் ரூபெல்லா தடுப்பூசி முகாம்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
ruballla

தென்காசி.

 

தமிழக அரசு தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து குழந்தைகளுக்கும் ( 15 வயது குழந்தைகள் வரை ) மீஸல்ஸ் ரூபெல்லா என்ற தடுப்பூசி வழங்கிட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்று 16-02-2017 வியாழன் அன்று தென்காசி எம்.கே.வி. கந்தசாமி நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இம்முகாம் நடைபெற்றது. எல்.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் இத்தடுப்பூசி போட மிகுந்த ஆர்வத்துடன் இம்முகாமில் கலந்து கொண்டனர். அனைத்து குழந்தைகளின் பெற்றோர்களும் இம்முகாமிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். பெற்றோர்களிடையே வடகரை PHC அரசு டாக்டர் முகமது இப்ராஹிம், ரூபெல்லா தடுப்பூசியின் சிறப்பம்சங்கள் மற்றும் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார். பெற்றோர்கள் கேட்ட சந்தேகங்கள் மிகவும் பொறுமையுடன் விளக்கப்பட்டது. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் அந்தோணி பால்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: