முதல்வராக எடப்பாடிபழனிச்சாமி பொறுப்பேற்பு: செங்கோட்டையில் அதிமுகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      திருநெல்வேலி
senkottai admk

செங்கோட்டை,

செங்கோட்டை தாலூகா அலுவலகம் முன்பு வைத்து நகர அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக முதலமைச்சாராக பொறுப்பேற்ற எடப்பாடிபழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் பதவியேற்றதை முன்னிட்டு நகர செயலாளர் கிருஷ்ணமுரளி(எ)குட்டியப்பா தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர அவைத்தலைவர் தங்கவேலு, பொருளாளர் ராஜா, முன்னாள் நகர்மன்ற தலைவர் மோகனகிருஷ்ணன், துணைத்தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். நிகழ்ச்சியில் நகர அம்மா பேரவை தலைவர் ஷாகீர்உசேன், துணைத்தலைவர் ஆதிமூலம், நகர எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி செயலாளர் ஜாபர்சாதிக், மாணவரணி செயலாளர் முத்துராமன், வார்டு நிர்வாகிகள் கனியத்தா, முத்துவேல், கணேசன், கோவிந்தன், அயூப்கான், சக்திவேல், தஸ்தகீர்பாபு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் திலகர், செந்திலஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்: