நீர்வரத்துக் கால்வாயை சேதப்படுத்திய மூன்றுபேர் கைது

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் டேமில் இருந்நு விவசாயத்திற்கு வரும் தண்ணீர் கால்வாயை சேதப்படுத்தியதாக மூவர் கைது செய்யப்பட்டனர். சாத்தனூர் டேமிலிருந்நு விவசாயத்திற்காக கடந்த சில தினங்களுக்கு முன் கலெக்டர் பிரசாந் வடநேரே தண்ணீரை திறந்து விட்டார். இந்த தண்ணீர் டேமின் வலது மற்றும் இடது புற கால்வாய்வழியாக திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள ஏரிகளுக்குச் சென்று பின்னர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும். இதனை கண்காணிக்க பொதுப் பணித்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி கடந்த 15ந் தேதி சாத்தனூர் டேமிற்கு உட்பட்ட கொளமஞ்சனூர் நீர் வரத்து கால்வாயை பணியாளர் சௌந்தர் (35) என்பவர் ஆய்வு செய்து கெண்டிருந்த போது தானிப்பாடி கொளமஞ்சனூர் கால்வாயை நான்கு பேர் சேத்படுத்தி நீரை வேறு கால்வாய்க்கு திருப்பி விட்டுக்கொண்டிருந்தனர். இதனை கவனித்த சௌந்தர் அங்கு சென்று என்ன செய்கிறீர்கள்? ஏன் கால்வாயை சேதப்படுத்தி தண்ணீரை திசை திருப்புகிறீர்கள் என கேட்டதற்கு அவர்கள் சௌந்தரை தகாத வார்த்தைகளால் திட்டியும் கைகளால் தாக்கியும் உள்ளனர். உடனே சௌந்தர் இது குறித்து மூங்கில்தறைபட்டு பாசன துறை உதவி செயற் பொறியாளர் மோகன சுந்தரத்திடம் கூற அவர் தானிப்பாடி போலீசில் அளித்த புகாரின் பேரில் எஸ்ஐ சிவசங்கர் வழக்கு பதிவு செய்து தேவரடியார் கப்பத்தைச் சேர்ந்த கார்த்திக் (34), ஆனந்தன் (36), மற்றும் வேலு (49) ஆகியோரை கைது செய்தும், தலைமறைவான ஆனந்தன் என்பவரை தேடி வருகின்றனர்.

 


 

இதை ஷேர் செய்திடுங்கள்: