முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவ,மாணவியர்களுக்கான வழிகாட்டி பயிற்சி கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் தொடங்கி வைத்தார்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி.

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   விடுதிகளில் தங்கி பயிலும் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிக்காட்டி பயிற்சியினை, நாகர்கோவில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பள்ளிஃகல்லூரி மாணவியர் விடுதியில்  குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, பேசியதாவது:-நமது மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி நடைபெற்றது. இன்றைய காலகட்டத்தில் 9-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு படிக்கும்போது, உயற்கல்வி கற்க, எதனை (பாடப்பிரிவு) தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.  ஏனென்றால், ஒவ்வொரு வருடமும் படித்தவர்கள் அதிகமாக வேலை தேடி வெளியே வருகிறார்கள். ஆகவே, தனியார் நிறுவனங்களில் பணிபுரிய வேண்டுமென்றால்,  மற்றவர்களைவிட நாம் திறமையும், அறிவும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  எல்லோரும், அரசாங்க வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால், அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.  குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், ஒரு பணியிடத்திற்கு சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டியிடுகிறார்கள். இவர்களை மீறி, நாம் வெற்றிபெற வேண்டுமென்றால், அனைத்து வகைகளிலும்  நாம் திறமையாக இருக்க வேண்டும்.  மேலும்,  வெற்றி பெறும்வரை போட்டித்தேர்வுகளில் மாணவ, மாணவியர்கள் கலந்து கொள்ள வேண்டும்.  தேர்வுகளில் வெற்றிபெற வில்லை என்று மாணவ, மாணவியர்கள் மனம் உடைந்தோ, தேர்வுகளில் கலந்துக்கொள்ளாமல் ஒருபோதும் இருக்க கூடாது.  ஒவ்வொரு தேர்வுகளிலும், ஒவ்வொரு அனுபவம் நிச்சயமாக உங்களுக்கு கிடைக்கும்.  மேலும், அரசு பல்வேறு திட்டங்கள் மூலம், சுயத்தொழில் தொடங்க மானியங்கள் வழங்கி வருகிறது.  தகுதியான நபர்கள், இதனை பெற்று, வாழ்வில் முன்னேற வேண்டும் என மாணவ, மாணவியர்களிடம் கேட்டுக்கொண்டார்.இப்பயிற்சியில், ஆரல்வாய்மொழி, பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதி, சுங்கான்கடை பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதி, நாகர்கோவில் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியிலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட வாழ்க்கை வழிகாட்டி கையேட்டினை கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான்   மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.நிகழ்ச்சியில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர்   கே.செந்தில்குமார், மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  பி.வி.சரவணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர்கள்  மோ. மணிகண்டன்,  கு. இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்