முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலிபான்கள் அட்டூழியம்: ஆப்கானில் துப்பாக்கி முனையில் 50 பேர் கடத்தல்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

காபூல்  - ஆப்கானிஸ்தானில் தார்சாப் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் துப்பாக்கி முனையில் புகுந்த தலிபான்கள் 50 பேரை கடத்தி சென்றனர்.

50 பேர் கடத்தல்
ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் பல இடங்களில் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்கள் அப்பாவி மக்களை கடத்தி சென்று கொலை செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில் தார்சாப் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் தலிபான் தீவிரவாதிகள் அதிரடியாக புகுந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் அங்கிருந்த 50 பேரை கடத்தி சென்றனர்.

தலிபான் தீவிரவாதிகள்
தற்போது அவர்கள் எங்கு வைக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை கொலை செய்யும் நோக்கத்துடன் கடத்தி சென்றிருப்பதாக தெரிகிறது. தங்களுக்கு எதிராக நடந்ததாக கருதி தலிபான் தீவிரவாதிகள் இப்படி செய்து உள்ளனர். கடத்தப்பட்டவர்களின் கதி என்ன ஆனது ? என்பது பற்றி இதுவரை தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago