முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் மனு செய்தவுடன் குடும்ப அட்டை கிடைக்கிறது கலெக்டர் எம்.ரவி குமார் தகவல்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி.

தூத்துக்குடி மாவட்டத்தில் பொது மக்கள் தகுந்த ஆதாரத்துடன் மனு செய்தால் குடும்ப அட்டை உடனடியாக வழங்கும் நிலை உள்ளது என கலெக்டர் எம்.ரவி குமார் தெரிவித்தார்.திருவைகுண்டம் வட்டம் அணியாபரநல்லூர் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவரின் மனு நீதி நாள் முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப் முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் செல்வபிரசாத் வரவேற்புரையாற்றினார். முகாமிற்கு தலைமைதாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் எம்.ரவி குமார் பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு கிராமத்தில் மாதம் ஒரு முறை மாவட்ட ஆட்சித்தலைவரின் மனு நீதி நாள் முகாம் நடைபெற்று வருகிறது. வருடத்திற்கு 12 முகாம்கள் ஆட்சித்தலைவரால் நடத்தப்படுகிறது. நமது மாவட்டத்தில் 403 கிராமங்கள் உள்ளன. அனைத்து கிராமங்களிலும் முகாம்கள் நடத்த எத்தனை வருடங்கள் ஆகும் என்பதனை பொது மக்கள் எண்ணி பார்க்க வேண்டும். முகாம் உடனடியாக நடத்தப்படவில்லை ஒரு மாதத்திற்கு முன்பே பொது மக்களிடம் கோரிக்ககை மனுக்கள் வாங்கப்பட்டு அதிகாரிகள் பரீசிலனைக்குப் பின்னர் தான் இந்த நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த காலக்கட்டத்தில் சமந்தப்பட்ட கிராமத்தில் பொது மக்களுக்கு எந்த விதமான குறைகளும் இல்லை என்ற நிலையினை அதிகாரிகள் உருவாக்க வேண்டும். அரசு நிர்வாகம் மக்களுக்கானது. எனவே அரசு அதிகாரிகள் தியாக உணர்வுடன் செயல்பட வேண்டும். அரசை நோக்கி மக்கள் என்ற நிலையினை மாற்றி மக்களை நோக்கி அரசு செயல்படுகிறது என்பதற்காக இது போன்ற முகாம்கள் நடைபெறுகின்றன. கிராமத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் அரசு செயல்படுத்தும் அனைத்து நலத்திட்டங்களும் சென்று சேர வேண்டும் என்பதே மனுநீதி நாள் முகாமின் நோக்கம் ஆகும். முகாம்கள் தவிர்த்து ஒவ்வொரு திங்கக்கிழமை அன்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மனுக்கள் அளித்து பொது மக்கள் தங்களுக்கு வேண்டிய நியாயமான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். நமது மாவட்டத்தில் குடும்ப அட்டையில் ஆதார்கார்டு, செல் நம்பர் இணைக்கும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் 3 இலட்சுதுத 90 ஆயிரம் நபர்களின் பெயர்கள் நீக்ககப்பட்டுள்ளது. 40 ஆயிரம் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது பொது மக்கள் தகுந்த ஆதாரத்துடன் மனு செய்தால் குடும்ப அட்டை உடன் வழங்கும் நிலை உள்ளது. சுகாதாரத்தில் மாநிலத்தில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் நமது மாவட்டம் சுகாதாரத்தில் முதல் இடத்தில் உள்ளது. அணியாபரநல்லூர் கிராமத்தில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் இல்லாத நிலையினை அடைந்திட பொது மக்கள் அதிகாரிகளிடம் உடன் இணைந்து பணியாற்றி, அணியாபரநல்லூர் கிராமத்தினை முழு சுகாதார கிராமமாக மாற்ற வேண்டும் என்றார்.முன்னதாக வருவாயத்துறையின் கீழ் 16 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டாவிற்கான ஆணையினையும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் விபத்து மற்றும் ஈமச்சடங்கிற்கான நிவாரணத்தொகை 1 பயனாளிக்கு ரூ.102500-க்கான காசோலையினையும் நலிந்தோர் உதவித்தொகை 4 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000- விதம் ரூ.80,000- க்கான காசோலையினையும், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை என 32 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000- வீதம் பெறுவதற்கான ஆணையினையும், மாவட்ட வழங்கல்துறையின் மூலம் 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டையினையும், மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் மூலம் பாரத மந்திரி குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,70,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.1,70,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், பசுமை வீடுகள் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.2,10,000- மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கான அனுமதி ஆணையினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழு 10 பயனாளிகளுக்கு வேலை அடையாள அட்டையினையும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துiறின் மூலம் 1 பயனாளிக்கு தையல் இயந்திரம் மற்றும் தனிநபர் இல்லக் கழிப்பறைக்கட்டுவதற்கான கடனுதவியினையும் கலெக்டர் எம்.ரவி குமார், அவர்கள் வழங்கினார்.மேலும் விளையாட்டுத்துறையின் சார்பாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.    இம்முகாமில் தூத்துக்குடி சார் ஆட்சியர் தீபக்ஜேக்கப், பயிற்சி ஆட்சியர் ராஜகோபலசங்கரா, மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட அலுவலர் பிச்சை, மகளிர் திட்ட அலுவலர் இந்துபாலா, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) காமராஜ், இணை இயக்குநர் (கால்நடை) ராமசாமி, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.போஸ்கோராஜா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) முத்து எழில், துணை இயக்குநர் (நிலம்) பிரபாகர், மாவட்ட வழங்கல் அலுவலர் செழியன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் பாத்திமா, ஆதிதிராவிடர் நல அலுவலர் கமலம், தாட்கோ மேலாளர் யுவராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெகவீரபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் -ஊரகவளர்ச்சிதிட்டம்) மைக்கேல், திருச்செந்தூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சக்திவேல், வட்டாட்சியர் செல்வபிரசாத் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago