முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் புதிய வகை வைரஸ் நோய்க்கு ஒருவர் பலி

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க்  - அமெரிக்காவில் எலி மூலம் பரவிய புதிய வகை வைரஸ் நோய்க்கு ஒருவர் பலியானார். 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய வைரஸ் நோய்
கொசு, எலி, பன்றி போன்றவற்றின் மூலம் அவ்வப்போது புதிய வகை வைரஸ் நோய்கள் பரவி மனிதர்களின் உயிரை பறிக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் புதிய வகை வைரஸ் நோய் ஒன்று தற்போது பரவி உள்ளது. நியூயார்க் நகரில் உள்ள புரோம்ன்ஸ் என்ற இடத்தில் 4 பேரை மர்ம காய்ச்சல் தாக்கி இருந்தது. அவர்களுடைய உடலை பரிசோதித்த போது, புது விதமான வைரஸ் தாக்கி இருப்பது தெரிய வந்தது. எலி மூலம் மனிதனுக்கு லெப்டோ ஸ்பைரோசிஸ் வைரஸ் பரவுவது உண்டு.

ஒருவர் பலி
இதேபோல் இந்த வைரசும் இருக்கிறது. எனவே, எலி மூலமாக இது பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. எலியின் சிறுநீர் மூலம் இந்த வைரஸ் தண்ணீரில் பரவி அதன் பிறகு மனிதனை தாக்கி இருக்க வேண்டும் என தெரிகிறது. இந்த 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அதில் ஒருவர் இறந்து விட்டார். மற்ற 3 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர நடவடிக்கை
இந்த வகை வைரஸ் ஒரு மனிதனை தாக்கினால் அவர் மூலம் மற்ற மனிதருக்கும் எளிதாக பரவி விடும். மூக்கு, வாய், கண் மூலமாகவும் மற்றும் உடலில் ஏற்பட்டுள்ள காயம் வழியாகவும் இது பரவும். எனவே, மேலும் நோய் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வைரஸ் நோயை தீர்க்க எந்த மருந்தும் இல்லை. ஆனாலும், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை கொடுத்து குணப்படுத்தி விடலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்