முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டீவ்வாக் ஒப்பீடு: 'பந்து வீச்சின் பிராட்மேன்' எனக்கு மிகப்பெரிய கவுரவம் - அஸ்வின்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

சென்னை : பந்து வீச்சின் பிராட்மேன் என்று ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் தன்னை ஒப்பிட்டது மிகப்பெரிய கவுரவம் என்று அஸ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிவேக விக்கெட்...

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது அவர் 250 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஸ்வின் அதிவேகப் பந்தில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை புரிந்தார்.

ஸ்டீவ்வாக் ஒப்பீடு

அஸ்வினின் பந்து வீச்சை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ்வாக் வெகுவாக பாராட்டி இருந்தார். பந்து வீச்சின் பிராட்மேன் அஸ்வின் என்று தெரிவித்து இருந்தார். ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான பிராட்மேன் பேட்டிங்கில் சகாப்தம் ஆவார். அஸ்வினின் பந்து வீச்சும், விக்கெட்டை வீழ்த்தும் திறமையும் நம்ப முடியாத வகையில் அபாரமாக இருப்பதாகவும், அவரது சாதனைகள் வியப்புக்குரியதாக இருப்பதாகவும் ஸ்டீவ்வாக் குறிப்பிட்டு இருந்தார்.

மிகப்பெரிய கவுரவம்

பந்து வீச்சின் பிராட்மேன் என்று ஸ்டீவ்வாக் தன்னை ஒப்பிட்டது மிகப்பெரிய கவுரவம் என்று அஸ்வின் கருத்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது-
பிராட்மேனுடன் என்னை ஒப்பிட்டு சிறந்தவர் என்று ஸ்டீவ்வாக் கூறி இருப்பது நிச்சயமாக எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். அவருடன் நான் விளையாடியது கிடையாது. ஸ்டீவ்வாக் ஒரு சிறந்த கேப்டனாக இருந்து பல ஆண்டுகளாக பாராட்டப்பட்டவர். ஆஸ்திரேலிய அணியை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றவர்.

கடினமாக உழைப்பேன்

அவர் மற்ற கேப்டன்களில் இருந்து மாறுபட்டவர். கடினமான உழைப்பால் அவர் அனைத்து பெருமையையும் பெற்றார். எனது பந்துவீச்சு செயல்திறனை தொடர்ந்து மேம்படுத்த எப்போதுமே கடினமாக உழைப்பேன். இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago