முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற இடங்களில் நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் ஆய்வு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற இடங்களை நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் அவர்கள் நேற்று (16.02.2017) ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கலெக்டர் வா.சம்பத், கலந்து கொண்டார். ஆய்விற்கு பின் நீதியரசர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் நடைபெற்ற இடங்களை ஆய்வு செய்து வருகிறேன். அதனடிப்படையில் நேற்று கோவையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற இடங்களான சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்புறம் மற்றும் காந்தி விளையாட்டு மைதானம் அருகில் உள்ள ரயில்வே பாதை ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்பு விசாரணை ஆணையத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் விசாரணை நடைபெறும் குறிப்பிட்ட நாளை பொதுமக்கள் அறியும் வகையில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு, அதன் பின்பு அந்த தேதியில் சேலம் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற இடங்களில் விசாரணை மேற்கொள்ளப்படும். அவ்வாறு விசாரணை மேற்கொள்ளும் போது பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கைகள் இருப்பின் நேரில் விசாரணை ஆணையத்திடம் தெரிவிக்கலாம். இவ்வாறு நீதியரசர் எஸ்.ராஜேஸ்வரன் அவர்கள்தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாநகர காவல்துறை ஆணையாளர் சஞ்ஜை குமார், இ.கா.ப., அவர்கள், துணை ஆணையர்கள் ஜோர்ஜி ஜோர்ஜ், இ.கா.ப, ராமகிருஷ்ணன், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் பால்பிரின்ஸிலி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தமிழ்ராஜன், மாவட்ட மேலாளர் (பொது) சக்திவேல், வட்டாட்சியர் லெனின் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்