45 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள்: கலெக்டர் சி.கதிரவன், வழங்கினார்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      கிருஷ்ணகிரி
3

கிருஷ்ணகிரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாவது புதன் கிழமைகளில் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள், காது கேளாத மற்றும் வாய்பேசாத மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவர் மூலமாக தேசிய மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அதன் படி 15.02.2017 அன்று நடைபெற்ற தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவ முகாமில் 68 நபர்கள் பங்கேற்றனர். இம்முகாமில் தகுதிவாய்ந்த 45 நபர்கள் மாற்றுத் திறனாளிகள் என கண்டறியப்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையினை கலெக்டர் சி.கதிரவன், வழங்கினார். இம்முகாமில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ச.பாபு, மற்றும் சிறப்பு மருத்துவர்கள் கார்த்திகேயன் எலும்பு முறிவு மருத்துவர், ஆனந்தகுமார் காது மூக்கு தொண்டை மருத்துவர், முரளிதரன் குழந்தைகள் நல மருத்துவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 


 

இதை ஷேர் செய்திடுங்கள்: