முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெயில் நிலையத்தை சேதப்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மீது போலீஸ் வழக்கு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      சினிமா
Image Unavailable

புதுடெல்லி  - ரெயில் நிலையத்தில் சேதம் ஏற்படுத்தியதாக நடிகர் ஷாருக்கான் மீது ரெயில்வே போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

‘ரயீஸ்’ படம்
நடிகர் ஷாருக்கான் நடித்த ‘ரயீஸ்’ என்ற படம் தற்போது நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த படத்தை பிரபலப்படுத்துவதற்காக ஷாருக்கான் கடந்த மாதம் 24-ந் தேதி மும்பையில் இருந்து டெல்லிக்கு கிராந்தி  எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். முக்கிய ரெயில் நிலையங்களில் அவர் தனது படத்தை மேம்படுத்தினார். ரெயிலில்  இருந்தவாறு ரசிகர்களை பார்த்து கையசைத்தார்.

பொது சொத்துக்களுக்கு சேதம்
ஷாருக்கானை பார்ப்பதற்காக ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அவரது ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் கோடா ரெயில் நிலையத்தில் ரெயில் சிறிது நேரம் நின்றபோது ஷாருக்கானை பார்க்க அவரது ரசிகர்கள்  திரண்டதால் நெரிசல் உருவானது. நெரிசலின் போது ரெயில் நிலையத்தில் இருந்த கடைகள் சேதமானது. பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.

வழக்குபதிவு
அங்கு கடை வைத்து நடத்தி வரும் விக்ரம்சிங் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவரது கடை முழுமையாக சேதமானது. பணமும்  திருட்டுபோனது. இது தொடர்பாக அவர் கோடா ரெயில்வே போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி ஷாருக்கான் மீது வழக்குபதிவு செய்து உள்ளனர். பொது சொத்துக்களை  சேதப்படுத்துதல் மற்றும் கலவரத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குபதிவாகி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago