முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி வனப்பகுதியில் செம்மர கடத்தல் கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

திருமலை - திருப்பதி வனப்பகுதியில் செம்மர கும்பலை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி, திருவண்ணாமலை வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.

தீவிர ரோந்து பணி
திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் செம்மரக் கடத்தலை தடுக்க செம்மரக் கடத்தல் தடுப்பு போலீசார் (டாஸ்க் போர்ஸ்) வழக்கம் போல் நேற்றிரவு முதல் விடிய, விடிய தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கடத்தல் கும்பல்
நேற்று அதிகாலை 3 மணிக்கு, பாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரக் கடத்தல் கும்பலின் நடமாட்டம் தென்பட்டது. 30-க்கும் மேற்பட்ட கும்பல் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருந்தனர். கட்டர், கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களால் செம்மரங்களை வெட்டி சாய்த்து, துண்டு துண்டாக வெட்டி கடத்துவதற்கு ஏதுவாக தயாராக அடுக்கி வைத்திருந்தனர்.

போலீசார் மீது தாக்குதல்
கண்காணித்த போலீசார், செம்மர கும்பலை சுற்றி வளைத்தனர். இதையறிந்த கடத்தல் கும்பல், கற்கள் மற்றும் ஆயுதங்களை வீசி போலீசார் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் போலீசார் நிலை குலையும் சூழல் ஏற்பட்டது. கடத்தல் கும்பலை சரணடையுமாறு போலீசார் எச்சரித்தனர். ஆனால், கும்பல் தாக்குதலை தொடர்ந்தது. இதையடுத்து, வானத்தை நோக்கி போலீசார் இருமுறை துப்பாக்கியால் சுட்டனர். பிறகு, செம்மர கும்பலை சரணடைய துப்பாக்கி முனையில் எச்சரித்தனர்.

தப்பி ஓட்டம்
செம்மரக் கும்பல், நாலா புறமும் தலைத்தெறிக்க தப்பி ஓடியது. போலீசார் விரட்டி பிடிக்க முயன்றனர். ஒருவர் மட்டுமே சிக்கினார். சுமார் 30-க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடி விட்டனர். பிடிபட்டவரிடம் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை சேர்ந்த வாலிபர் கோபி (வயது 27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்தனர். ரூ.20 லட்சம் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய கும்பலை பிடிக்க வனப்பகுதியில் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

13 பேர் கைது
தப்பி ஓடிய கும்பலை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோரும் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் என ஆந்திரா போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதேபோல், பாக்ராபேட்டை வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதாக சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 13 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ரூ.10 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago