முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். அட்டவணை அறிவிப்பு: முதல் ஆட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு அணிகள் மோதல்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை : ஏப்ரல் 5-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. முதல் ஆட்டத்தில் ஐதராபாத் - பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

10-வது ஐ.பி.எல்.

10-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஏப்ரல் 5-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. இதன்படி தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஐதராபாத் சன் ரைசர்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் இரவு 8 மணிக்கு மோதுகின்றன. ஏப்.6-ந்தேதி நடக்கும் 2-வது லீக்கில் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன. போட்டி நடைபெறும் 10 நகரங்களில் ஒன்றாக இந்தூரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2011-ம் ஆண்டுக்கு பிறகு இந்தூரில் முதல்முறையாக சில ஐ.பி.எல். ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

இறுதிப்போட்டி

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டி தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக அதாவது மே 21-ந்தேதி இறுதிப்போட்டி அரங்கேறுகிறது. தொடக்க மற்றும் இறுதி ஆட்டம் நடப்பு சாம்பியனுக்குரிய ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. பங்கேற்கும் 8 அணிகள் உள்ளூர்-வெளியூர் அடிப்படையில் தலா 14 லீக் ஆட்டங்களில் விளையாடும். மொத்தம் 60 ஆட்டங்கள் நடைபெறுகிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையிலான நாட்களில் 4 ஆட்டங்கள் மாலையில் (4 மணி) தொடங்கும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்