பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று: ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      விளையாட்டு
wc-qualifiers-india 2017 2 16

கொழும்பு : பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தகுதி சுற்று போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்று ஆட்டத்தில் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

தகுதி சுற்று

11–வது பெண்கள் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்கிறது. கடந்த ஆண்டு நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 4 அணிகள் நேரடியாக இந்த போட்டிக்கு தகுதி பெற்று விட்டன. எஞ்சிய 4 அணிகள் எவை? என்பதை நிர்ணயிக்கும் பெண்கள் உலக கோப்பை தகுதி சுற்று கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது.


‘சூப்பர் சிக்ஸ்’

இதில் லீக் ஆட்டங்கள் முடிவில் ‘ஏ’ பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்த இந்தியா, இலங்கை, அயர்லாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் முதல் 3 இடங்களை பெற்ற தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் ‘சூப்பர் சிக்ஸ்’ சுற்றுக்கு தகுதி பெற்றன. சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு அணியும், அடுத்த பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

இந்தியா வெற்றி

நேற்று முன்தினம் நடந்த சூப்பர் சிக்ஸ் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியா–தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் மிதாலிராஜ் 64 ரன்னும், மீஷ்ரம் 55 ரன்னும் எடுத்தனர்.

156 ரன்னில் அவுட்

பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய தென்ஆப்பிரிக்க அணி, இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 46.4 ஓவர்களில் 156 ரன்னில் ஆல்–அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக திரிஷா ஷெட்டி 52 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஷிகா பாண்டே 4 விக்கெட்டும், எக்தா பிஸ்த் 3 விக்கெட்டும், தீப்தி ‌ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஸ்வரி கெய்க்வாட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பாக். தோல்வி

மற்றொரு ஆட்டத்தில் இலங்கை அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இன்னொரு ஆட்டத்தில் வங்காளதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்தது. இன்று நடைபெறும் ஆட்டங்களில் இந்தியா–வங்காளதேசம், பாகிஸ்தான்–அயர்லாந்து, இலங்கை–தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இந்த வார ராசிபலன் - 24.06.2018 முதல் 30.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 24.06.2018 to 30.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: