முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொகுதி – 1 தேர்வினை கரூர் மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவது குறித்து ஒருங்கிணைப்பு ஆலோசனை கூட்டம் : கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடந்தது

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      கரூர்
Image Unavailable

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி - 1 க்கான போட்டித் தேர்வினை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நடைபெற்றது.

 

கண்காணிப்பு

 

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி – 1 தேர்வினை எழுதவுள்ள தேர்வாளர்களுக்காக 8 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்தேர்வு பணியினை கண்காணிக்க முதன்மைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வு அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள், மண்டல அலுவலர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு எழுதுவோர் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றடைய கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு தினத்தன்று சிறப்பு பேருந்துகள் வசதியும், தேர்வு மையங்களில் பிரத்யேகமாக பேருந்துகளை நிறுத்திச்செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுத ஏதுவாக தேர்வு கூடங்களில் தரைதளத்தில் இட ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளது. தேர்வு எழுதுவோர் அலைபேசி மற்றும் இதர எலக்ட்ரானிக் சம்பந்தப்பட்ட சாதனங்களை தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்ல எக்காரணம் கொண்டும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், தேர்வு எழுதுவோர் அலைபேசி மற்றும் இதர எலக்ட்ரானிக் சம்மந்தப்பட்ட சாதனங்களை வைத்திருப்பது தெரிய வந்தால், உடனடியாக அறை கண்காணிப்பாளர்களால் தேர்வு எழுதும் அறையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தேர்வு மையங்களில் குடிநீர், கழிவறை, உரிய காவல் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டு தயார் நிலையிலுள்ளது. தேர்வர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.சூர்யபிரகாஷ் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வி.சிவப்பிரியா, காவல் துணை கண்காணிப்பாளர் இளங்கோ, வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் மற்றும் தேர்வு பணியில் ஈடுபடவுள்ள அனைத்து தலைமையாசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago