பிரமோஸ் அதிவேக ஏவுகணை சோதனை அடுத்த மாதம் இந்தியா நடத்துகிறது

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      இந்தியா
Brahmos(N)

பெங்களூரு  - பிரமோஸ் ஏவுகணையின் அதிநவீன வடிவமாக அபாயகரமான பிரமோஸ் அதிவேக ஏவுகணை ஒன்றை டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் அடுத்த மாதம் 10-ந் தேதி ஏவி சோதிக்க உள்ளனர்.

பிரமோஸ் ஏவுகணை
பிரமோஸ் ரக ஏவுகணைகளை டி.ஆர்.டி.ஓ. என்னும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு உருவாக்கி சோதித்து வருகிறது. இந்த நிலையில், பிரமோஸ் ஏவுகணையின் அதிநவீன வடிவமாக அபாயகரமான பிரமோஸ் அதிவேக ஏவுகணை ஒன்றை டி.ஆர்.டி.ஓ. விஞ்ஞானிகள் அடுத்த மாதம் 10-ந் தேதி ஏவி சோதிக்க உள்ளனர்.

பாக். - சீனாவை...
இந்த ஏவுகணை, 450 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்கும். குறிப்பாக, பாகிஸ்தானின் பெரும்பகுதி மற்றும் சீனாவின் குறிப்பிட்ட பகுதிகளில் சென்று தாக்குதல் நடத்தத்தக்க வல்லமை வாய்ந்ததாக இருக்கும். இந்த தகவலை பெங்களூருவில் நடந்து வரும் விமான கண்காட்சியின் இடையே,  நேற்று முன்தினம் நிருபர்களிடம் பேசிய டி.ஆர்.டி.ஓ. தலைவர் கிறிஸ்டோபர் தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, “அடுத்த 2.5 ஆண்டுகளில் 800, 850 கி.மீ. தொலைவுக்கு சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல் வாய்ந்த பிரமோஸ் ஏவுகணை உருவாக்கி சோதிக்கப்படும்” எனவும் குறிப்பிட்டார்.


அக்னி ஏவுகணை
“கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் ஆற்றல்மிக்க அக்னி ஏவுகணைகளை பொறுத்தமட்டில், எம்.டி.சி.ஆர். என்னும் ஏவுகணை நுட்பம் கட்டுப்படுத்தும் அமைப்பு விதிமுறைகளின்கீழ் சில கட்டுப்பாடுகளை இந்தியா பின்பற்ற வேண்டிய நிலையில் இருக்கிறதா?” என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இந்தியா 5 ஆயிரம் கி.மீ. தொலைவுக்கு அப்பால் அக்னி ஏவுகணைகளை அனுப்ப முடியும். இதுவே பல நாடுகளை எதிரியாக்கும்” என பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: