புதுக்கோட்டை மாவட்டத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது : கலெக்டர் கணேஷ் தகவல்

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      புதுக்கோட்டை

மாட்சிமை தங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு படி புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்துப்பகுதிகளிலும் (சாலை, கால்வாய், நீர்நிலைகள், குடியிருப்பு பகுதிகள், தனியார் நிலங்கள், மற்றும் பலவற்றில்) உள்ள சீமை கருவேல மரங்களை வருகின்ற 22.02.2017 க்குள் முற்றிலுமாக அகற்றிட ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் சீமைக்கருவேல மரங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்கள் நன்கு அறிந்துகொள்ள வேண்டியுள்ளது அதன் தீமைகள் கீழ்க்கண்டவாறு ஆகும்.

 

ஆபத்து

 

சீமை கருவேல மரங்களின் தீமைகள் விவசாயம் மற்றும் ஏணைய செடிகள் தழைக்கா வண்ணம் நிலத்தை வீணடிக்கிறது.அடர்ந்து வளர்ந்து நிலத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமிப்பு செய்துவிடக்கூடியது.நஞ்சு மிகுந்த முட்கள் விலங்குகளுக்கும் மாந்தர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவைநிலத்தில் புல்களை அடியோடு வளரவிடாமல் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.


நிலத்தடி நீரைக்குறைப்பதால் சில அறிய மூலிகைகளை வளரவிடாமல் தடுக்கிறது.சீமைக்கருவேல மரங்களின் வீரியத்தால் பிறத்தாவரங்களுடன் கலந்து உட்கொள்ளும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிறு கோளாறுகள் அடைகின்றன.இவை அதிகமான ஆக்சிஜினை உட்கொண்டு கரியமில வாயுவை வெளியிடுகிறது.

இறுதியில் விளைநிலங்கள் பாலைவனங்கள் ஆகின்றன

 

எனவே, இத்தகைய தீமையுள்ள சீமை கருவேல மரங்களை; அகற்றிட மாவட்ட நிர்வாகத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கும்படியும், தனியார் நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை பொதுமக்கள் தாங்களாவே முன்வந்து 22.02.2017க்குள் அகற்றி கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர், தவறும் பட்சத்த்pல் அத்தகைய சீமைக்கருவேல மரங்களை அரசே அகற்றிவிட்டு அதற்கான செலவுத்தொகையை மாட்சிமை தங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவின் படி பட்டாதாரர்களிடமிருந்து இருமடங்காக வசூல் செய்யப்படும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் சு.கணேஷ், தெரிவித்துள்ளார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: