முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களுருவில் உள்ள நீதிபதி குன்ஹா - வக்கீல் ஆச்சார்யா வீடுகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

பெங்களுரு  -  பெங்களுருவில் உள்ள நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் வாதாடிய வக்கீல் ஆச்சார்யா ஆகியோரது வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. பெங்களுரு தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வராய் ஆகியோர் தீர்ப்பு வழங்கினார்கள்.

பெங்களுருவில் வன்முறை
இதைத் தொட்ர்ந்து சசிகலா,இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2014-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு வழங்கிய போதே பெங்களுருவில் வன்முறை வெடித்தது. பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. நீதிபதியை கண்டித்தும் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

பலத்த பாதுகாப்பு
இதனால் மீண்டும் அதுபோல சம்பவங்கள் நடந்து விடாமல் இருக்க பெங்களுருவில் உள்ள நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா மற்றும் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் வாதாடிய வக்கீல் ஆச்சார்யா ஆகியோரது வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த 2 வீடுகளிலும் கர்நாடக மாநில போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்