மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      சென்னை

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாணவர் ஊக்குவிப்பு நிகழ்வில் தொழில்நுட்ப தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு சான்றிதழும் ஊக்கத் தொகையும் பரிசாக அளிக்கப்பட்டது.

 

கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்ற மாணவர் ஊக்குவிப்பு நிகழ்விற்கு டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். நிகழ்விற்கு கல்வி குழும இயக்குனர் தினேஷ், நிர்வாக அலுவலர் பாபு முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பிச்சைமணி வரவேற்றார்.


 

நிகழ்வில் தொழில்நுட்ப மாணவர்களுக்கு தேர்வை திறம்பட எழுதுதல், வேலைவாய்ப்புக்கு தகுதி ஏற்படுத்திக் கொள்ளுதல், கிடைக்கும் வேலையில் தனித்திறமையுடன் திகழ்தல், கற்ற கல்வியை வைத்து தொழில் முனைவோராக மாறுதல் குறித்து டி.ஜெ.எஸ் கல்வுி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் அறிவுறுத்தினார். தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்களும்,மாணவர்களும் உரையாற்றினார்கள்.

 

விழாவில் நடந்து முடிந்த தொழில்நுட்ப தேர்வுகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த டி.ஜெ.எஸ் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்களான நிகமானந்த ஷர்மா, ரகுமானியா, செண்பகவள்ளி, அனிதா ஆகியோருக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்களை டி.ஜெ.எஸ் கல்வி குழும தலைவர் டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார். மேலும் துறை வாரியாக தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், கல்லூரியில் நடைபெற்ற திறனறி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் ஊக்கத் தொகை மற்றும் சான்றிழ்கள் வழங்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: