முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசின் இணையதளத்தில் இருந்து மோடி - வெங்கையா படங்களை அகற்ற தேர்தல் கமிஷன் உத்தரவு

வியாழக்கிழமை, 16 பெப்ரவரி 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி  - மத்திய அரசின் இணையதளத்தில் பிரதமர் மோடி மற்றும் வெங்கையா நாயுடு புகைப்படங்களை உடனடியாக அகற்றுமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் கமிஷனுக்கு புகார்
மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சகம் சார்பில், ‘பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் இணைய தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெறும் நிலையில், இது தேர்தல் விதிமுறையை மீறிய செயல் என்று தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் வந்தன.

நீக்க உத்தரவு
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் வெங்கையா நாயுடு புகைப்படங்களை உடனடியாக அகற்றுமாறு மத்திய மந்திரிசபை செயலாளர் பி.கே.சின்காவுக்கு தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. அதில், ‘தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தவுடன், இந்த படங்களை அகற்றாதது ஏன்? வேறு அமைச்சகங்களின் இணையதளங்களிலும் இத்தகைய படங்கள் இடம்பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago